search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொண்டத்து காளியம்மன்"

    • மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் மற்றும் அமரபணீஸ்வரர் கோவிலில் கடந்த சில மாதங்களாக புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

    இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து 22-ந் தேதி கலசாபிஷேகமும், வாஸ்து சாந்தியும் நடைபெற்றன. 23-ந் தேதி யாக சாலையில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், முதற்கால யாகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.

    24-ந் தேதி 2-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணி அளவில் 3-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று 4-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணி அளவில் 5-ம் காலயாக பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி வைத்தனர்.

    முன்னதாக காலை 8 மணி அளவில் கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து ெகாண்டு சிறப்பித்தார்.

    மேலும் கோபி, பாரியூர், நாயக்கன் காடு, வெள்ளாளபாளையம், கூகலூர், அழுக்குளி, குருமந்தூர், சவன்டபூர், வலையபாளையம், காசிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து மதியம் 1 மணிக்கு கோமாதா பூஜையும், தசதானம், தச தரிசனம், மகா அபிஷேகம், மகா அலங்கார பூஜை நடைபெற உள்ளது. மாலை 6 மணி அளவில் அம்மன் மற்றும் பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பந்தலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு டிரோன் மூலம் புனித கலச நீர் தெளிக்கப்பட்டது.

    • பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • குண்டம் இறங்குதல் மற்றும் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    பெருமாநல்லூர் : 

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் மற்றும் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இதையொட்டி நேற்று காலை 10மணிக்கு குண்டம் திறப்பு, பூ வார்த்தல் நடைபெற்றது. இரவு 7மணிக்கு சக்திவேல்களுக்கு மஞ்சள் நீராட்டுதல், வீரமக்களுக்கு எண்ணை வழங்குதல் , 7-15 மணிக்கு தென்னாட்டு வீர சிலம்பாட்ட குழு நிகழ்ச்சி நடந்தது. இரவு 8மணிக்கு இன்னிசை நகைச்சுவை பட்டிமன்றம் ,9மணிக்கு படைக்கல சாவடியில் பொங்கலிடுதல், படைக்கலம் எடுத்தல் நடந்தது. 10மணிக்கு குதிரையுடன் படைக்கலம் புறப்படுதல், படைக்கலம் சன்னதி அடைதல், 10-30மணிக்கு உள்ளி விழவு என்னும் பெருஞ்சலங்கையாட்டம் நடந்தது. இரவு 1மணிக்கு பரிவார மூர்த்திகளின் கன்னிமார், கருப்பராயன் முனீஸ்வரன் சிறப்பு வழிபாடு, அம்மை அழைத்தல் நடந்தது.

    இன்று 4-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு காப்பு கட்டு பூசாரிகள் கை குண்டம் வாரி இறங்குதல், வீரமக்கள் குண்டம் இறங்குதல் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். சிலர் கைக்குழந்தைகளுடன் குண்டம் இறங்கி வழிபட்டனர்.குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மற்றும் தேர் திருவிழாவில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், வரன்பாளையம் திருநாவுக்கரசர் மடம் மவுன சிவாச்சல அடிகளார், தாராபுரம் தவத்திரு காமாட்சி தாச சுவாமிகள் பங்கேற்றனர்.

    மேலும் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சுப்பராயன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், கே.என். விஜயகுமார், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சத்தியபாமா பொன்னுச்சாமி, பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தாமணி சிடிசி. வேலுச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

    காைல 8மணிக்கு குண்டம் மூடுதல், சிறப்பு அக்னி அபிஷேகம், அபிஷேக ஆராதனை, அம்மன் பூத வாகன காட்சியுடன் புறப்பாடு, மண்டபக்கட்டளை நடந்தது. மதியம் 2மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை, அம்மன் யாழி வாகனத்தில் திருத்தேர் எழுந்தருளல், மண்டப கட்டளை, மிராசுதாரர்களுக்கு மரியாதை செய்தல், தேங்காய் வழங்குதல் நடக்கிறது. மதியம் 3-30மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 7மணிக்கு அம்மன் கலைக்குழு மற்றும் ஸ்ரீசக்தி பண்பாட்டு மையம் வழங்கும் ஒயிலாட்டம் , வள்ளி கும்மியாட்டம் நடக்கிறது. 9-30 மணிக்கு கிராமிய இசை நிகழ்ச்சி நடக்கிறது.குண்டம் திருவிழா மற்றும் தேரோட்டத்தில் பங்கேற்பதற்காக திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கோவிலுக்கு வந்து செல்வதற்காக திருப்பூர் மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பெருமாநல்லூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மொபைல் டாய்லெட் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு இருந்தது. அவிநாசி டி.எஸ்.பி. பவுல்ராஜ் தலைைமயில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க பெருமாநல்லூரில் சில இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    நாளை 5-ந்தேதி காலை 7-30 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, அம்மன் சேஷ வாகனத்தில் திருவீதி உலா, மாலை 7மணிக்கு அம்மன் புறப்பாடு , மண்டப கட்டளை நடக்கிறது. 6-ந்தேதி காலை 7-30மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு, மாலை 7மணிக்கு அம்மன் புறப்பாடு நடக்கிறது. 7-ந்தேதி காலை 7-30மணிக்கு அம்மன் புலி வாகன திருவீதி உலா, மாலை 7 மணிக்கு அம்மன் புறப்பாடு நடக்கிறது. 8-ந்தேதி காலை 11 மணிக்கு மகா தரிசனம், அம்மன் புறப்பாடு, கொடிஇறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா மற்றும் தேர்த்திருவிழா வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் பிரசித்திபெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையடுத்து தினமும் காலை, மாலை சிறப்பு பூஜை, கிராம சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை அம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு அம்மன் புறப்பாடு, குதிரை வாகன காட்சி நிகழ்ச்சிகளும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீர் நிரப்புதல், 6 மணிக்கு தோரணம் கட்டுதல், இரவு 9.45 மணிக்கு பரிவட்டம் கட்டுதல், திருக்கல்யாணம், பக்தர்களுக்கு காப்பு அணிவித்தல், மஞ்சள் நீராடுதல், பொங்கல் வைத்தல், இரவு 10 மணிக்கு அம்மன் புறப்பாடு, புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா ஆகியவை நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு சக்திவேல்களுக்கு மஞ்சள் நீராட்டுதல், குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு எண்ணெய் வழங்குதல், 9 மணிக்கு படைக்கல சாவடியில் பொங்கலிடுதல், குதிரையுடன் படைக்கலம் புறப்படுதல், நள்ளிரவு 1 மணிக்கு பரிவார மூர்த்திகளின் கன்னிமார், கருப்பராயன், முனீஸ்வரன் சிறப்பு வழிபாடு, அம்மை அழைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    குண்டம் இறங்கும் போது கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பக்தர்களின் வசதிக்காகவும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருவதை படத்தில் காணலாம்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி 19-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்க உள்ளனர். காலை 6 மணிக்கு அன்னதான விழா நடைபெறுகிறது.

    குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ள இருப்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பக்தர்களின் வசதிக்காகவும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் பக்தர்கள் குண்டம் இறங்கும் இடத்தில் பக்தர்கள் உப்பு கொட்டியும், தீபங்கள் ஏற்றியும் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். விழாவையொட்டி கோவில் அருகில் தனியார் பங்களிப்புடன் 32 அடியிலான பிரமாண்ட வேல் அமைக்கப்படுகிறது. அன்று மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

    விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் பந்தல் அமைக்கும் பணியும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செல்வம் பெரியசாமி, அவினாசி அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தக்கார் லோகநாதன் தலைமையில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    ×